ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவரை தெரிந்த அனைவரும் இரங்கல் தெரிவிப்பார்கள், துக்கம் விசாரிப்பார்கள், அதுவும் ஒரு நாட்டின் பிரதமரோ, குடியரசு தலைவரோ இறந்து விட்டால் மற்ற நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள். அவருடைய சாதனையை/ ஆட்சியை புகழ்வார்கள்,
அடுத்த நிலையில் இருக்கும் தலைவர், தொலைக்காட்சியில் தோன்றி மக்களை அமைதியாக இருக்க சொல்லுவார். அந்த நாட்டின் பங்கு சந்தை வீழ்ச்சி அடையும். மற்ற நாடுகளின் பங்கு சந்தைகள் கூட வீழ்ச்சி அடையலாம். ஆனால் வெனிசுலா அதிபர் சாவோஸ் இறந்த போது வளரும் நாடுகளின் பங்கு சந்தை உட்பட அனைத்து பங்கு சந்தைகளும் ஏற்றம் கண்டன, ஏன் ?
அப்படி என்ன செய்தார் சாவோஸ் , மற்ற நாடுகளும், தனியார் வங்கிகளும் ஒரு நாட்டின் தலைவர் இறந்த போது ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் ?
1) தனியாரிடம் இருந்த 1000 க்கும் மேற்பட்ட எண்ணைக்கிணறுகளை நாட்டுடமை ஆக்கினார்,
2) Chevron (அமெரிக்க எண்ணெய் நிறுவனம்), British Petroleum(இங்கிலாந்து எண்ணெய் நிறுவனம்), Total (பிரான்ஸ் எண்ணெய் நிறுவனம்) உட்பட பல தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் சுரங்கங்களை அரசுடைமை ஆக்கினார்,
3) வெனிசுலா நாட்டின் வறுமையை குறைத்தார்,
4) நாட்டு மக்களுக்கு நல்ல உணவும் வீடும் கிடைக்க மானியங்கள் கொடுத்தார்,
5) கல்வியையும், மருத்துவ வசதிகளையும் பெருக்கினார், மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வண்ணம் செய்தார்,
6) மின் மற்றும் மின்னணு நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கினார்,
7) Bank of Venezuela வை நாட்டுடைமை ஆக்கினார்,
8) சிமென்ட் நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கினார்,
9) நாட்டின் பெரிய இரும்பு-எஃகு (Steel company) நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கினார்,
10) ஐநா சபையில் பேசும்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பேய் (டெவில்) என்று கூறினார்,
11) வெனிசுலாவில் இருந்த அமெரிக்க தூதரை மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேற சொன்னார்,
12) தன்னை கொல்ல அமெரிக்க அரசாங்கம் செய்த சதி வேலைகளை சதிவேலைகளையும் முறியடித்ததுடன் ஆதாரத்துடன் நிரூபித்தார்,
13) பன்னாட்டு நிதியம் (International Monetary Fund) என்ற அமைப்பின் ஏக போக கட்டுப்பாட்டை உடைக்க அர்ஜென்டினா,பொலிவியா பிரேசில் போன்ற நாடுகளுடன் இணைந்து Bank of the South என்ற வங்கியை, IMF க்கு மாற்றாக நிறுவினார்.
இந்த வேலைகளை செய்த காரணத்தினால் அமெரிக்கா உட்பட பல வல்லாதிக்க நாடுகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்துகின்றன.
0 கருத்துகள்: