தற்காலத்தில், இலங்கையில் விவாகரத்து இடம்பெரும் அளவு அதிகம் எனவும் திருமணமான மொத்தப் பெண்களின் தொகையில்
1/4 (25%) ஆனோர் விவாகரத்து பெற்றவர்கள் எனவும் கொழும்பு பல்கலைக்கழக
வெகுஜன ஊடக கற்கைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது.
திருமணம் குறித்து மக்கள் தொடர்பாடல் சார் அவதானம் ஒன்றை பெற திருமணமான பெண்களை மாத்திரம் கவனத்தில் எடுத்து இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வெகுஜன ஊடக கற்கைப் பிரிவுப் பேராசிரியை அஜன்தா ஹபுஆரச்சி மற்றும் ஆய்வு உதவியாளர் கிரிசான சிரிவர்தன ஆகியோர் இணைந்து மேற்கொண்ட இவ் ஆய்விற்கு அப் பல்கலைக்கழக 2ஆம், 3ஆம் வருட மாணாக்கரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய 14 நகரங்களை உள்ளடக்கி இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வின் மூலம் அதிகப்படியான விவாகரத்து இடம்பெறும் நகரமாக கொழும்பு நகரம் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதன்படி இங்கு நூற்றுக்கு 57% ஆகும்.
அத்தோடு கம்பஹா, இரத்தினபுரி, காலி ஆகிய நகரங்களில் விவாகரத்து நிகழும் வீதம் அதிகம்.
அதிகுறைந்த விவாகரத்து நிகழும் நகரங்களாக ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்படுள்ளன. அந்த நகரங்களில் விவாகரத்து நிகழும் வீதம் 8% ஆகும்.
இவ் ஆய்வில் உள்வாங்கப்பட்ட விவாகரத்துப் பெற்ற பெண்களில் 58% ஆனவர்கள் காதல் திருமணம் முடித்தவர்கள். 42% ஆனோர் பேச்சு வார்த்தையின் பின் நிச்சயித்து திருமணம் முடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: