
நேற்று (02) இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் அக்கரைப்பற்று 6ம் பிரிவு வெள்ளப்பாதுகாப்பு வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரான முகமட் முஸ்தப்பா பகாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
நண்பர்களான இருவரும் சம்பவதினமான நேற்று மாலையில் மதுபானத்துடன் அட்டாளைச்சேனை முல்லைத்தீவு பிரதேசத்திற்குச் சென்று மது அருந்திவிட்டு தமது வீடுகளிற்கு செல்லும் வழியில் இருவருக்குமிடையே வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னதாக நண்பரை மற்றவர் கத்தியால் கழுத்திலும் மார்பிலும் வெட்டியதையடுத்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கத்தியால் வெட்டிய நபர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளவர் அதே வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய பசீர் என்றழைக்கப்படும் ஆப்தீன் தஸ்லீன் என தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்குமிடையே பழைய பகை இருந்து வந்துள்ளதாகவும் இந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு ஏற்பட் வாய்தர்கமே கொலையாக மாறியுள்ளது எனவும் பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்: