டமாஸ்கஸ்:
பல
தினங்களாக நடந்த போராட்டத்தின் இறுதியில் சிரியாவின் வடக்கு நகரமான அல்
ரக்காவை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆளுநர் ஹஸன் ஜலீல் மற்றும்
ஆளுங்கட்சியான பஅஸ் கட்சியின் மாகாண செயலாலர் ஜெனரல் சுலைமான் சுலைமான்
ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் முதன் முதலாக
ஒரு மாகாணத்தின் தலைநகரை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். யுப்ரடீஸ்
நதியின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த முன்னாள்
சர்வாதிகார ஹாபிஸுல் ஆஸாதின் சிலையை எதிர்ப்பாளர்கள் உடைத்தனர். நகரத்தில்
இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள விமான நிலையத்தில் எதிர்ப்பாளர்களுக்கும்,
ராணுவத்தினருமிடையே போராட்டம் தொடருகிறது. கூடுதல் ராணுவத்தினர்
இப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தக்பீர் முழங்கி எதிர்ப்பாளர்கள் முன்னேறுவதை இணையதளத்தில் வெளியான வீடியோ வெளியாகியுள்ளது.
0 கருத்துகள்: