இலங்கையில் நாலா பக்கங்களிலும் பொதுபல சேனா என்ற இனவாத பௌத்த பயங்கரவாத அமைப்பு
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அநியாயங்கள் அட்டூழியங்கள் உடன்
நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்
என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
இன்று 07ம் திகதி மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற பொதுச்சபை அமர்வில் பொதுபல சேனாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வண்ணம் கருப்புப்பட்டியணிந்து கெண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஜனாதிபதி தலைமையிலான இந்த நாட்டு அரசாங்கம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகளை வழங்கியிருப்பதன் மூலம் முஸ்லிம்களையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது தெளிவாகிறது.
இவ்வாறு சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அதிக அக்கறை செலுத்தும் இந்த அரசாங்கத்திற்குமிடையில் பாரிய பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றது இந்த இனவாத பொதுபல சேனா.
அது மாத்திரமல்ல ஜாதிக ஹெல உறுமயவைப் போன்று எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று அவர்ளின் ஆதரவால் அரசியலில் பிரவேசிப்பதுதான் பொதுபல சேனாவின் உள்நோக்கமாக காணப்படுகின்றது.
30வருட கால பயங்கரவாத யுத்தம் முடிவுற்று இந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிறுபான்மையினருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதான சூழ்நிலையில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடப்பது உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கு பங்கமாக இருக்கின்ற சகலருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டில் மூவின மக்களும் நிம்மதியாக ஒற்றுமையாக எவ்வித பிளவுமின்றி வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டுமென ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

0 கருத்துகள்: