சோவியத் யூனியன் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான யுத்தத்தின் போது
காணாமல் போன ரஸ்ய இராணுவ வீரரொருவர் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்னர்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அக்காலத்தில் சோவியத் படையணியில் கட்டாயமாக சேர்க்கப்பட்டதாக
தெரிவிக்கப்படும் பக்ரிடின் ககிமோவ் தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட்
பகுதியில் வைத்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவர் 1979 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் சோவியத், ஆப்கானை நோக்கி
படையெடுத்து வெறும் 2 மாதங்களில் காணாமல் போயுள்ளார். யுத்தத்தில்
காயமடைந்த இவரை 4 ஆப்கான் வாசிகள் காப்பாற்றி, பராமரித்து வந்துள்ளனர்.
இதன்பின்னர் தனது பெயரை சேய்க் அப்துல்லா என மாற்றிக்கொண்ட அவர் ஆப்கான்
பெண்ணொருவரை திருமணம் செய்து அங்கேயே தங்கியுள்ளார். அவர் தற்போது
பகுதியளவில் நாடோடியாக இருப்பதாகவும் மூலிகை மருத்துவ
வைத்தியராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சேய்க் அப்துல்லாவின் தற்போதைய வயது 53, இவர் உஸ்பெக் இனத்தைச் சேர்ந்தவர்.
சோவியத் யூனியன் மற்றும் ஆப்கான் இடையிலான போரின் போது பக்ரிடின் ககிமோவ் சோவியத்தின் சிகப்புப் படையில் சேவை புரிந்துள்ளார்.
இந்நிலையில் போரின் போது காணாமல் போன 264 சிகப்புப் படை வீரர்களை
தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போதே
சேய்க் அப்துல்லா கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது குழும்ப விபரங்களை சரியாக சொன்னதுடன் தன்னுடன் இராணுவத்தின்
சேவையாற்றியோரின் புகைப்படங்களை காட்டியபோது அவர்களையும் சரியாக
இணங்காட்டியுள்ளார்.
அடுத்தவாரமளவில் சேய்க் அப்துல்லா தனது உறவினர்களை சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சோவியத் யூனியன் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி
ஆப்கானுக்கு படையெடுத்ததுடன் இதில் சுமார் 15,000 கோவியத் இராணுவத்தினர்
கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: