புதுடெல்லி:தீவிரவாத
வழக்குகளில் சிக்கவைத்து முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைக்கும் விவகாரம்
குறித்து பாராளுமன்றம் விரைவில் விவாதிக்க உள்ளது.
நேற்று முன் தினம் லாலுபிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், பசுதேவ்
பட்டாச்சார்யா, இ.டி.முஹம்மது பஷீர் ஆகியோர் சபாநாயகர் மீரா குமாரிடம்
இவ்விவகாரம் குறித்து தனியாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை
விடுத்திருந்தனர்.
இவ்விவகாரம் குறித்து எழுப்பினால் விவாதிக்கலாம் என்று
மீராகுமார் பதில் அளித்து இருந்தார். இரண்டு மாதத்திற்குள் விவாதம்
நடக்கும் என கருதப்படுகிறது.
சட்டத்திற்கு சாதி, மதம் வித்தியாசம்
இல்லை. எனினும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை கூட இல்லாமல் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங்
கூறினார்.
0 கருத்துகள்: