மலேசியாவிற்கும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் இடையில் உள்ள சபா என்ற கிராமம் மலேசியாவின் ஒரு பகுதி ஆகும்.
அங்கு திடீரென்று ஆயதங்களுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஃபிலிப்பைன்ஸ்
நாட்டு முஸ்லிம்கள் 200 பேர் அதை தங்கள் நாடு என்று உரிமை கொண்டாடி மலேசிய
இராணுவத்துடன் சண்டையிட்டு வருவதால், மலேசியா பிரதமர் அவர்களை கடுமையாக
எச்சரிக்கை செய்துள்ளார்.
இக்கிராமம் 1800 ஆண்டுகள் ஃபிலிப்பைன்ஸ்
நாட்டு மன்னரால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததாகவும், கடந்த நூறு ஆண்டுகளாக
இவ்விடத்தை மலேசியா ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகவும் கூறி அதை மீண்டும்
தங்களிடமே தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்த பகுதி
முஸ்லிம்களின் தலைவராக தன்னை தானே முடி சூட்டிக் கொண்டதாகவும் ஜமாலுள்
கிராம் III தெரிவித்தூள்ளார்.
முதலில் படகுகள் மூலம் உள்ளே
நுழைந்த இந்த படைகள் கடலோர கிராம் சபாவில் நுழைந்து மறைந்து இருந்ததை அந்த
பகுதி மீனவர்கள் காவல்துறைக்கு தெரிவித்தனர். அவர்களிடம் ஆயுதம் இருந்ததன்
காரணத்தால் உடனடியாக இராணுவம் வரவழைக்கப்பட்டது. பின்பு தங்களை
காப்பாற்றுமாறு வெள்ளை துணியை காட்டிய படி வந்த ஒரு பிரிவினரை இராணுவம்
நெருங்கும் போது, இன்னொரு பிரிவினர் இராணுவத்தை நோக்கி சுட
ஆரம்பித்துள்ளனர். இத்தாக்குதலில் மலேசியா இராணுவத்தினர் தரப்பில் எட்டு
பேரும் ஃபிலிப்பைன்ஸ் முஸ்லிம்கள் தரப்பில் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள
மலேசியா பிரதமர், "இது ஒரு கோழைத் தனமான தாக்குதல் என்றும் இது தொடர்பாக
எந்த பேச்சு வார்த்தையும் நடத்த முடியாது" என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மேலும் தாக்குதல் அதிகரித்துள்ளதால் அங்கு ஹெலிகாப்டர்
மூலம் இராணுவம் தாக்குதலை மலேசியா ஆரம்பித்துள்ளது. இத்தாக்குதலால்
பீதியடைந்துள்ள கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.
உலகின் பல நாடுகளுக்கும் மலேசிய அரசால் ஏற்றுமதி செய்யப்படும் பாமாயிலின்
பெரும் பகுதி இப்பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதால், இத்தாக்குதல்
பிரச்சனை மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மேலும் மலேசியாவிற்கும்
ஃபிலிப்பைன்ஸ்ற்கும் இவ்விவகாரம் இரு நாட்டு நல்லுறவில் விரிசலை
உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: