
அமெரிக்க பல்வேறு மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில்
இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள்
கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் பல நாடுகள் எதிர்பை வெளியிடுவதில்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் 16
பொதுமக்களை அமெரிக்க படைவீரர் ஒருவர் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் இவ்வாறான
குற்றச்சாட்டுக்களை கண்டு அஞ்சப் போவதில்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். இலவச கல்வி, இலவச சுகாதாரம் போன்ற திட்டங்களை
அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: