முஸ்லிம்களை
கருவறுக்கும் குஜராத் மாநிலத்தில் "குஜராத் பலகலைக்கழக" 61ம் ஆண்டு
விழாவில் வழங்கப்பட்ட 18 தங்கப்பதக்கங்களில் 15 பதக்கங்களை முஸ்லிம்
மாணவிகள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். நேற்று நடைபெற்ற விழாவில், குஜராத்
மாநில கவர்னர், கமலா பென்னிவால் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். SLU
கல்லூரியில் BA ஹோம் சயின்ஸ் பயின்ற மாணவி "ஷமீமா" 3 தங்கப்பதக்கங்களை
பெற்றார். BSC பட்டம் பெற்ற "ஷீரீன்" என்ற மாணவிக்கும் 3 தங்கம் கிடைத்தது.
ஐ.ஏ.எஸ். படிக்க நினைக்கும் ஷமீமா, அதற்கான ஆயத்த வேளைகளில் ஈடுபட்டுள்ள
வேளையில், ஷீரீன், MSC படிப்புக்குப்பின் ரிசர்ச்சில் ஈடுபடப்போவதாக
தெரிவித்தார். ஆதிவாசிகள் வாழும் பகுதியில் படித்த "தையிபா" என்ற மாணவி BA
சமஸ்கிருதம் பாடத்தில் 2 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். தையிபா,
ஆசிரியையாக விருப்பம் தெரிவித்தார். யாஸ்மீன் பானு என்ற மாணவியும்
சம்ஸ்கிருத பாடத்தில் தங்கம் வென்றுள்ளார். அஹ்மதாபாத் FD ஆர்ட்ஸ் காலேஜின்
மாணவியான "கவ்சர் பானு"வுக்கு, ஆங்கில இலக்கியத்தில் தங்கம் கிடைத்தது.
செயின்ட் சேவியர் கல்லூரியில் எகானமிக்ஸ் பயின்ற "சகபா கான்" என்ற
மாணவியும் தங்கம் பெற்று சாதித்தார்.

0 கருத்துகள்: