நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் செயற்படுவதாக பொது பல சேனா அமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இராணுவத்தலைமை பொது பல சேனாவை கோரியுள்ளதாக ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்தவாரம் பொது பல சேனா பிரதிநிதிகளுக்கும் இராணுவ தலைமை அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற விஷேட சந்திப்பொன்றின் போதே ஆதாரங்களை ஒப்படைக்குமாறு இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த சந்திப்பில் இராணுவத் தளபதி லெப்டினெல் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, ஐ. நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இராணுவ தலைமை சார்பில் கலந்து கொண்டதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிவித்துள்ள பொது பல சேனாவின் உறுப்பினரான எம்பிலிபிட்டிய விஜித தேரர், இராணுவம் தம்மிடம் பிரச்சினையின் பின்னணி தொடர்பில் ஆதாரங்களை கோரியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சில ஆதாரங்களை தம் இராணுவத்திடம் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் பொது பல சேனாவின் தலைவர் கிராம விமலா ஜோதி தேரர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பொது பல சேனாவின் பிரதி நிதிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சில பெளத்த குழுக்ககளை சேர்ந்தவர்கள் என தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் சிலர் பெளத்தத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயற்படுவதாக பொது பல சேனா சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

.
பொது பல சேனாவிடம் ஆதாரம் கோருகிறது இராணுவம் 

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts