இந்த
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு சக்தியும் தலையெடுக்க நாம்
விடமாட்டோம். எவரும் சட்டத்தைக் கையிலெடுக்க முடியாது. இலங்கை
முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அதற்கான சகல ஏற்பாடுகளையும்
நாம் மேற்கொண்டுள்ளோம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சின்
உயரதிகாரிகளுக்குமிடையில் இன்று பிற்பகல் அமைச்சில் இடம்பெற்ற விசேட
சந்திப்பின்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல்
கபில ஹென்தவிதாரண இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
சுமார் 35 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இச்
சந்திப்பில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் மற்றும்
ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன்
முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமிடத்து உடனடியாகவே
அந்தந்த மாவட்டத்துக்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகளுக்கு
தகவல்களை வழங்குமாறும் அவர்கள் விரைந்து செயற்பட்டு தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்வர் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிசாருக்கு தகவல்களை
வழங்கும் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்குமாறும்
இதன்போது கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் மாவட்ட
ரீதியான பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் முஸ்லிம் பிரதிநிதிகளிடம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது தொடர்பு இலக்கங்களும்
வழங்கப்பட்டுள்ளன.
இச் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு சக்தியும் தலையெடுக்க நாம்
விடமாட்டோம். எவரும் சட்டத்தைக் கையிலெடுக்க முடியாது. இலங்கை
முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அதற்கான சகல ஏற்பாடுகளையும்
நாம் மேற்கொண்டுள்ளோம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளுக்குமிடையில் இன்று பிற்பகல் அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் கபில ஹென்தவிதாரண இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
சுமார் 35 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இச் சந்திப்பில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் மற்றும் ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமிடத்து உடனடியாகவே அந்தந்த மாவட்டத்துக்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகளுக்கு தகவல்களை வழங்குமாறும் அவர்கள் விரைந்து செயற்பட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வர் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிசாருக்கு தகவல்களை வழங்கும் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்குமாறும் இதன்போது கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் மாவட்ட ரீதியான பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது தொடர்பு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்: