பாபரி
மஸ்ஜிதை இடித்த ஹிந்துத்துவா சக்திகள் அயோத்தியில் கோயில்களை கட்டவும்
தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கோயில்களின் கட்டுப்பாட்டை சொந்தமாக்க
வேண்டும் என்ற நோக்கத்துடன் ஹிந்துத்துவா சக்திகள் கொலைகளை கூட நடத்துவதாக
ஹிந்து சன்னியாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ராம்கோட்டில் சவுபுர்ஜித் கோயிலின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர
தன்னை கொலைச் செய்ய ஹிந்துத்துவாவினர் முயன்றதாகவும், தாக்குதலில் இருந்து
கஷ்டப்பட்டு தப்பியதாகவும் முன்னாள் மஹந்த் 90 வயதான ராம் அஸாரே தாஸ்
கூறுகிறார். இதன் காரணமாக வர் கோயில் இருந்து வெளியேறியுள்ளார்.
7.5 ஏக்கர் நிலத்தை கொண்ட கோயிலின் நிர்வாக அதிகாரத்தை தங்களுக்கு எழுதி
தருமாறு விஸ்வஹிந்து பரிஷத்தின் அயோத்திய தலைவர் மஹந்த் ப்ரிஜ் மோகன்
தன்னிடம் வலியுறுத்தியதாக ராம் கூறுகிறார். இதற்கு எதிர்ப்பு
தெரிவித்ததற்காக தன்னை கொலைச் செய்ய முயன்றார்கள் என்று அவர் குற்றம்
சாட்டுகிறார்.
அவதில் நவாபுகள் உள்ளிட்டோர் நன்கொடையாக வழங்கிய
கோயில்கள் மற்றும் அகாராக்களை கைப்பற்ற ஏராளமான கொலைகள் அயோத்தியில்
மட்டும் நடந்துள்ளன என்று ராம் கூறுகிறார்.
பாபரி மஸ்ஜிதை
இடிக்கவேண்டும் என்று 1980-ஆம் ஆண்டு விசுவஹிந்து பரிஷத் சூழ்ச்சியை
துவங்கியதில் இருந்து இப்பகுதியில் தாக்குதல்கள் ஆரம்பித்ததாக சன்னியாசிகள்
கூறுகின்றனர்.
வன்முறைகள் மூலம் எதனையும் பெறுவதற்கு விசுவஹிந்து
பரிஷத், சன்னியாசிகளுக்கு பயிற்சி அளித்தது என்று சல்சங் ஆசிரமத்தில்
மஹந்த் ரகுநனந்தன் தாஸ் கூறுகிறார்.
கோயில்கள் அனைத்தும்
குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதாக ஃபைஸாபாத்தில் வழக்கறிஞரான லால்
வர்மா கூறுகிறார். மரணிக்கும் மஹந்த்களின் இடத்தை தந்திரமாக கைப்பற்றுவது,
மஹந்துகள் மரணித்துவிட்டதாக அவர்களது சீடர்கள் மூலம் கூறவைத்து அதிகாரத்தை
கைப்பற்றுவது ஆகிய சூழ்ச்சிகளை ஹிந்துத்துவாவாதிகள் கையாளுகின்றனர்.
ஏராளமான பிரபல சன்னியாசிகள் இவ்வாறு கோயில்களில் இருந்து
வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட பலரும் சரயு நதிக்கரையில்
வாஸுதேவ் கட்டில் தற்காலிக குடில்களில் வசித்து வருகின்றனர். அயோத்தியில்
பிரபலமான சித்ரகோடி அஸ்தனில் மஹந்தாக பணியாற்றிய சித்ரகோடி பாபா என்பவரும்
இங்குதான் வசிக்கின்றார். பத்தாண்டுகளுக்கு முன்பாக இவர் கோயில் இருந்து
வெளியேற்றப்பட்டார்.
0 கருத்துகள்: