பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மாணவியான நேஹா ராமு
என்பவர் நுண்ணறிவுத் திறனை மதிப்பிடும் பரீட்சையில் புதிய சாதனை
படைத்துள்ளார்.இவரின் தற்போதைய வயது 12 ஆகும்.
சிறுவருக்கான நுண்ணறிவுத் திறனை (IQ) மதிப்பிடும் பொருட்டு மென்சா எனும்
அமைப்பால் நடத்தப்பட்டுவரும் போட்டியில் இவர் 162 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இது இப்பரீட்சையில் இவரது வயதில் ஒருவர் பெறக்கூடிய அதிக புள்ளிகளாகும்.

நேஹா Cattell IIIB பரீட்சையிலேயே இப்புள்ளியினை பெற்றுள்ளார்.
இது நுண்ணறிவுத்திறனில் 160 புள்ளிகளைப் பெற்றதாகக் கருதப்படும் நவீன
பௌதீகத்தின் தந்தை எல்பர்ட் ஐன்ஸ்டைன், பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீபன்
ஹோக்கிங் ஆகியோரை விட அதிகமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஐன்ஸ்டைனின் நுண்ணறிவுத் திறன் பரீட்சை எதிலும் தோற்றாத போதிலும் அவரின் திறன் பொதுவாக 160 ஆக மதிப்பிடப்படுகின்றது.
நேஹாவின் அறிவுத் திறன் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் தந்தை லண்டனில் கண்சிகிச்சை நிபுணராக உள்ளார்.
இவர் ஆரம்பத்தில் பள்ளிக்கான நுழைவுத்தேர்வொன்றில் 280/280 புள்ளிகளை
பெற்றுள்ளார். இதனையடுத்தே நேஹாவின் பெற்றோர் தமது பிள்ளையின் அறிவுத்
திறனை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
நேஹா ராமுக்கு முன்னாள் பல சிறுவர்கள் நுண்ணறிவுத் திறன் பரீட்சையில் வியக்கத்தக்க அளவு புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நான்கே வயதான ஹெய்டி ஹென்கின்ஸ் மென்ஸா நுண்ணறிவுத் திறன் போட்டியில் 159 புள்ளிகளை பெற்றிருந்தார்.

இதேபோல் 16 வயதான லோரன் மார்பே 161 புள்ளிகளையும், ஆறுவயதான பிரனவ் வீரா
, 12 வயதான ஜேகொப் பார்னட், 11 வயதான ஒலிவியா மென்னிங், 11 வயதான
விக்டோரியா கோவி, 15 வயதான பெபியோ மான் ஆகியோர் 162 புள்ளிகளுக்கும் அதிகம்
பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்: