புத்தளம்
நகர சபை எதிர்க்கட்சி (சுயேட்சைக்குழு) உறுப்பினர் எஹியா கான் நகர சபை
ஊழியர் ஒருவரை தாக்கியதாகக் கூறி நேற்றைய தினம் நகர சபை ஊழியர்களால்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
தமது சக ஊழியரை
தாக்கிய நகர சபை உறுப்பினரை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்
என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அத்துடன் இதற்கு
எதிராக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்
போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
நகர சபை வேலைத்தளம் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் நகர சபை உறுப்பினர் எஹியா கானை
தொடர்புகொண்டு கேட்டதற்கு, தாம் குறித்த நபரை தாக்கவில்லை எனவும்
இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில் எனவும் அவர்
தெரிவித்தார்.
இதற்கிடையில் இச் சம்பவம் தொடர்பில் புத்தளம்
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் இது தொடர்பில்
உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புத்தளம்
நகர சபை எதிர்க்கட்சி (சுயேட்சைக்குழு) உறுப்பினர் எஹியா கான் நகர சபை
ஊழியர் ஒருவரை தாக்கியதாகக் கூறி நேற்றைய தினம் நகர சபை ஊழியர்களால்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
தமது சக ஊழியரை தாக்கிய நகர சபை உறுப்பினரை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அத்துடன் இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
நகர சபை வேலைத்தளம் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் நகர சபை உறுப்பினர் எஹியா கானை தொடர்புகொண்டு கேட்டதற்கு, தாம் குறித்த நபரை தாக்கவில்லை எனவும் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்: