அப்சல்
குரு தூக்கிலிடப்பட்டதில் உள்ள "மர்மங்களை" வெளிக்கொண்டு வரும்
எண்ணத்துடன் "தகவல் அறியும் உரிமை" சட்ட ஆர்வலர் "அரூஷி ஷர்மா" என்பவர்
கேட்டிருந்த எந்த கேள்விக்கும் பதிலளிக்கமுடியாது, என "திஹார்" ஜெயில்
நிர்வாகம் சொல்லிவிட்டது. RTI ஆர்வலரான அரூஷி, அப்சல் குரு தூக்கு
சம்மந்தமாக ஜெயில் நிர்வாகத்துக்கு வரப்பெற்ற அரசின் கடிதங்களின் நகல்கள்,
ஜெயில் நிர்வாகத்தின் சார்பாக அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்கள்,
அப்சலை தூக்கிலிட்ட ஊழியர் மற்றும் அந்த நடவடிக்கையில் பங்கெடுத்த இதர
அலுவலர்கள் குறித்த விபரங்கள், மனித உரிமை மீறப்படாமல் இறுதி சடங்கு
செய்யப்பட்டனவா? என்பதை உறுதி செய்ய எதுவாக உடல் அடக்கத்தின்போது
எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை கேட்டிருந்தார்.
RTI ஆர்வலரின் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதிலாக, பாதுகாப்பு காரணங்களை
காரணம் காட்டி எந்த தகவலையும் கொடுக்க முடியாது, என ஜெயில் நிர்வாகத்தின்
சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. எனினும், மர்மமான முறையில் அவசரகதியில்
நிறைவேற்றப்பட்ட இந்த தூக்கு தண்டனை விஷயத்தில் உள்ள, முரண்பாடுகளையும்
சட்டத்துக்கு புறம்பான காரியங்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக ஜெயில்
நிர்வாகம் அளித்த பதிலை "மறு ஆய்வு" செய்யக்கோரும் அடுத்த மனுவை அனுப்ப
ஆலோசனை செய்துவருகிறார், அரூஷி ஷர்மா.

0 கருத்துகள்: